சரக்கு அடிச்சிட்டு ஜாலியா மியூக் போட்டேன்.. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஓப்பன் டாக்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய பின் இருவரும் இணைந்து Blue Star என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கியிருக்க இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் அடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.
அதில், எனக்கு அதிகமாக இப்படத்தில் உதவிய அறிவுக்கு நன்றி. பொதுவாக எல்லா படத்திலும் இசையமைக்கும் போது உதவி இயக்குனர்கள் பலர் இருப்பார்கள்.
ஆனால், இப்படத்தில் நான், அறிவு, ஜெயக்குமார் மட்டும் இருப்போம். கேரளாவில் நான் பாட்டுக்கு தண்ணி (மது) அடிச்சிட்டு ஜாலியா தான் கம்போஸ் செய்தேன்.
பின்னணி இசையும் அப்படி தான் தண்ணி அடிச்சிட்டு பண்ணேன். யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் கோவிந்த் வசந்தா தெரிவித்துள்ளார்.