குஷ்பூ, பிரபு திருமணம்.. தடுத்து நிறுத்திய சிவாஜி.. காரணம் இதுதானா..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. முன்னணி நடிகர்கல் ரஜினி, கமல, சிரஞ்சீவி, பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த குஷ்பூ, அரசியலிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்வதற்கு முன் நடிகர் பிரபுவை காதலித்து திருமணம் வரை சென்றிருக்கிறார் குஷ்பூ.
ஆனால் சில காரணங்களால் பிரபு - குஷ்பூ திருமணம் நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் குஷ்பூ - பிரபு காதல் பற்றிய ரகசியத்தை கூறியிருக்கிறார். 50 ஆயிரம் கொடுத்தால் தான் அரசியல் மீட்டிங்கிற்கு செல்லும் மேடையே ஏறும் குஷ்பூ. அதை கொடுக்கமாட்டோம் என்று திமுக கூறியதால் காங்கிரஸ் கட்சிக்கு சென்றது.
அங்கு ஒரு மாதத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் கொடுத்திருந்தனர். சினிமா ஆசை போக அரசியலுக்கு சென்றார். குஷ்பூ - பிரபு காதல் திருமணம் வரை சென்றது. சிவாஜி தான் அதை தடுத்து நிறுத்துகிறார். இல்லை என்றால் சிவாஜி குடும்பத்தின் மருமகளாக குஷ்பூ சென்றிருப்பார். கடுமையாக மாறிய சிவாஜி, குஷ்பூவுடைய திரை வாழ்க்கையை முடிக்கும் அளவிற்கு நிலைமை மாறியது.
அரசியல் செல்வாக்குள்ளவர் சிவாஜி என்பதால், நடிகையை தன் குடும்பத்தின் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக அரசியல் அழுத்தத்தை குஷ்புவிற்கு கொடுக்கிறார் சிவாஜி. திரைப்படத்துறையில் இருக்கும் தயாரிப்பாளர்களை கூப்பிட்டு குஷ்புவிற்கு வாய்ப்பே கொடுக்காதீர்கள் என்று கூறுகிறார்.
ஏனென்றால், வீட்டில் நிறைய குழப்பம் வருகிறது, திரைப்படத்துறையை விட்டு அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்பா பேச்சை மீற முடியாது என்பதால் பிரபுவும் இதற்கு அமைதியாகிவிட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பெரியளவிற்கு வரவில்லை என்பதால் பிஜேபிக்கு சென்றுவிட்டார்.