சினிமாவின் கொடூர பக்கம்!! பாலிவுட் பிரபலங்களின் மர்மமான மரணங்கள்..

Sridevi Actors Bollywood Indian Actress Actress
By Edward Aug 23, 2025 11:30 AM GMT
Report

மர்மமான மரணங்கள்

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகர்கள் வாழ்க்கையில் திடீரென சோகமான சம்பவம் நடந்து வாழ்க்கையை நிறைவு செய்துவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் மனதில் தனிப்பட்ட பிரச்சனைகளாலும் மன அழுத்த காரணங்களாலும் அகால மரணமடைந்து விடுவார்கள். அப்படி பாலிவுட்டில் அகால மரணமடைந்த நட்சத்திரங்கள் யார் யார் என்று பார்ப்போம்..

சினிமாவின் கொடூர பக்கம்!! பாலிவுட் பிரபலங்களின் மர்மமான மரணங்கள்.. | Bollywood Actors Who Died Mysteriously

ஸ்ரீதேவி

80களில் இருந்து இந்திய சினிமாவில் பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் போது 2018ல் துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலின் அவரது அறையில் இருக்கும் குளியலறை பாத்டப்பில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திவ்ய பாரதி

உச்சக்கட்டத்தில் இருக்கும்போது சிறு வயதிலேயே தயாரிப்பாளரின் மகன் சாஜித் அடியட்வாலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகை திவ்ய பாரதி. இரண்டே வருடத்தில் இரவுபகலாக 22 படங்களில் நடித்து பிரபலமான திவ்ய பாரதி 19 வயதில் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து இறந்தார். இவரின் மரணம் சதி என்றும் வேறு சிலர் விபத்து என்றும் கூறி வந்தாலும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

ஜியா கான்

நிஷாப்த் என்ற படத்தில் துணிச்சலான ரோலில் நடித்தும் கஜினி மற்றும் ஹவுஸ்ஃபுல் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜியா கான். 2013ல் அவரது மும்பை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

குரு தத்

பியாஸா மற்றும் காகஸ் கே பூல் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கி நடித்த குரு தத், 1964ல் அகால மரணமடைந்தார். அதிகப்படியான தூக்கு மாருந்தை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்தார் என்றும் மன அழுத்தத்தில் இருந்த குரு தத் இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் எதற்காக இறந்தார் என்று மர்மமாகவே இருக்கிறது.

சினிமாவின் கொடூர பக்கம்!! பாலிவுட் பிரபலங்களின் மர்மமான மரணங்கள்.. | Bollywood Actors Who Died Mysteriously

பர்வீன் பாபி

70, 80களில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த நடிகை பர்வீன் பாபி தனது 50வது வயதில், மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அதனால் போராடினார். 2005ல் மும்பையிலுள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடைந்துள்ளார்.