தமிழ் நடிகைகளா வேண்டவே வேண்டாம்.. 24 வயது பஞ்சாபி நடிகையை அல்லு தூக்கிய நடிகைசூர்யா?

Suriya Indian Actress Siva (director)
By Edward Jul 17, 2022 10:58 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு பிறகு இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். 18 வயதான நடிகை கிரித்தி செட்டியை ஜோடியாக நடிக்க வைத்து வரும் இயக்குனர் பாலா இரண்டாம் கட்டப்படப்பிடிப்பினை ஆரம்பிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கினையும் ஆரம்பிக்கவுள்ளார். இதன்பின் சூர்யாவின் 43 வது படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்காக ஹீரோயின் தேடல் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பஞ்சாபி நடிகையும் பிக்பாஸ் 13 வது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை மஹிரா சர்மாவை நடிக்க வைக்கவுள்ளார்களாம். 18 வயது கிரித்தி செட்டியை அடுத்து தற்போது 24 வயது மஹிரா சர்மாவும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சிறுத்தை சிவா முடிவெடுத்துள்ளாராம்.

Gallery