நாத்தனாருக்கு வரதட்சணை கொடுமை செய்த ஹன்சிகா!! விரைவில் கைது செய்யப்படுவாரா?
ஹன்சிகா மோத்வானி
தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இன்று பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொஹைல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பாலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், ஹன்சிகாவின் சகோதரரின் மனைவி நான்சி, தன்னை ஹன்சிகாவும் அவரது அம்மாவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாகவும் தனது flatஐ விற்றுவிடும்படியும் அவர்கள் கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் கூறியிருக்கிறார்.
இதனைதொடர்ந்து ஹன்சிகா, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட FIR-ஐ ரத்து செய்யும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். பின் ஹன்சிகாவுக்கு எதிராக வழக்கை தொடர மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலிசாருக்கு அனுமதியும் கிடைத்துள்ளது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்பட்டு தேவைப்பட்டால் கைதும் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.