என் மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷிடம் அந்த விஷயத்தை பார்த்தேன்.. போனி கபூர் ஓபன் டாக்

Keerthy Suresh Boney Kapoor Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 02, 2023 07:41 AM GMT
Report

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தடம் பதித்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார்.

தற்போது உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் பார்த்ததிலேயே என் மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.