வடிவேலுவை போல் ரெட் கார்ட் போடப்பட்ட நடிகர்? காப்பாற்றி தேற்றிய விஜயகாந்த்

Vijayakanth Vadivelu
By Edward Jun 21, 2022 11:15 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் காமெடி நடிகராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காமெடியாக தொகுத்து வழங்கி பிரபலமானசர் நடிகர் பாஸ்கி. பிரபலங்களை வைத்து 4 ஆயிரம் நேர்காணல் செய்துள்ளார். இதையடுத்து சீரியல்கள் படங்களில் வரும் கதாபாத்திரங்களை கலாய்த்து பேசி சர்ச்சையிலும் சிக்கினார்.

சமீபத்தில் இயக்குனர் சித்ரா லட்சுமனன் அவர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். சினிமாவில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொண்ட பாஸ்கி, தனக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு சினிமாவில் இருந்து தூக்கினார்கள்.

இதற்கு காரணம் சிலர் நடித்த படங்களில் வரும் கதாபாத்திரத்தினை கலாய்த்து பேசியதால் இதற்காக போராட்டமே நடத்தினார்கள் சினிமாத்துறையினர். ஆனால் எனக்கு உதவியாக கேப்டர் விஜயகுமார் இருந்தார். தனிப்பட்ட விசயத்தை கலாய்க்கவில்லையே படத்தின் கதாபாத்திரத்தை தானே அப்படி பேசுகிறார் என்று ஆதரவாகவும் பேசினார்.

மேலும் சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட என் பக்கம் இருந்து பேசினார்கள். இதேபோல் தான் நடிகர் வடிவேலு செய்த சிலர் பிரச்சனையால் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

வீடியோ

Gallery