இதை மட்டும் விராட் கோலி பார்க்கணும்!! அனுஷ்கா சர்மா போஸ்டருக்கு இச் கொடுத்த குட்டி பையன்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா சர்மா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்த அனுஷ்கா சர்மா, மீண்டும் கர்ப்பமாக கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இன்று வரையில் தன்னுடைய அழகான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா குறித்து ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விளம்பரத்தில் நடித்திருந்த அனுஷ்கா சர்மாவின் போஸ்டர் பொது இடத்தில் ஒட்டப்பட்டிருக்கிறது.
அந்த வழியாக சென்ற ஒரு சிறுவன் அனுஷ்கா சர்மாவின் போஸ்டரை பார்த்துள்ளார். பார்த்ததும் அனுஷ்கா சர்மாவின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை நெட்டிசன்கள் விராட் கோலி இதை பார்த்து ஷாக்காகும் படியான மீம்ஸ் வீடியோவாக எடிட் செய்து டிரெண்ட் செய்துள்ளனர்.
Boy Rocked Virat Kohli Shocked ?pic.twitter.com/Uzzi3Ksdo4
— Sekar ? (@itzSekar) April 30, 2024