3-வது கல்யாணத்தை யோசிக்காதீங்க!! 2-வது திருமணத்தின்போது மாமனார் சீக்கா சம்யுக்தாவுக்கு சொன்ன அட்வைஸ்..

Indian Cricket Team Marriage Tamil Actress
By Edward Mar 15, 2026 06:45 AM GMT
Report

நடிகை சம்யுக்தா

மாடலிங் துறையில் அறிமுகமாகி, ஷி, குத்துக்கு பத்து, காஃபி வித் காதல், வாரிசு, காரி. குருமூர்த்தி, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. முதல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் பெற்றெடுத்த சம்யுக்தா, கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்து அவரை விவாகரத்து செய்து இந்தியா பக்கம் வந்தார்.

3-வது கல்யாணத்தை யோசிக்காதீங்க!! 2-வது திருமணத்தின்போது மாமனார் சீக்கா சம்யுக்தாவுக்கு சொன்ன அட்வைஸ்.. | Breakup Third Marriage Srikanth Advise Samyuktha

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்த சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுருதா ஸ்ரீகாந்துடன் நட்பாக பழகி பின் அவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விவாகரத்தான் அனிருதாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சம்யுக்தா.

மாமனார் சீக்கா

இந்நிலையில், சம்யுக்தா தன்னுடைய மாமனார் ஸ்ரீகாந்த் கொடுத்த அட்வைஸ் கொடுத்து பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சம்யுக்தா, தொகுப்பாளரிடம், 2வது கல்யாணம் என்பது எப்போதும் எளிமையானது. எதன் மீதும் எதிர்பார்ப்பு இருக்காது, சந்தோஷமாக இருக்கிறீர்களா என்றுதான் கேட்பார்கள். ஆனால் ஸ்ரீகாந்த், ஒரு விஷயம் சொன்னார்.

3-வது கல்யாணத்தை யோசிக்காதீங்க!! 2-வது திருமணத்தின்போது மாமனார் சீக்கா சம்யுக்தாவுக்கு சொன்ன அட்வைஸ்.. | Breakup Third Marriage Srikanth Advise Samyuktha

இங்கே பாருங்கள் உங்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம், எனவே காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள். அதாவது பிரேக் அப் செய்து கொள்ளலாம், 3வது திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதெல்லாம் வேலைக்காகாது. உங்கள் ரிலேஷன்ஷிப்புக்கு எது ஒர்க்கவுட் ஆகிறதோ, அதை செய்யுங்கள் என்று கூறியதுதான் அவர் செய்த ஒரே அட்வைஸ் என்று சம்யுக்தா பகிர்ந்துள்ளார்.