ஆடை இல்லாமல் இருந்த காட்சியை இப்படிதான் பார்த்தார்கள்!! ஓப்பனாக பேசிய நடிகை பிரகிதா..

Gossip Today Iravin Nizhal
By Edward Nov 05, 2023 07:15 PM GMT
Report

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக கடந்த ஆண்டு வெளியானது இரவின் நிழல். இப்படம் வெளியான முதலிலே பல விமர்சனங்களை பெற்றது.

அதுவும் நிர்வாண காட்சிகளை பலர் விமர்சித்து பேசிய நிலையிலும் பலர் நல்ல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படத்தில் ஆரம்பத்தில் பார்த்திபனுடன் உதவி இயக்குனராக கமிட்டாகி அதன்பின் அவரது கேரக்டரில் யாரும் செட்டாகவில்லை என்ற கூறி அவரையே நடிக்க வைத்தார் பார்த்திபன்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பிரகிதா, ஒரே சிங்கிள் டேக்கில் எப்படி இந்த காட்சியில் நடிக்க போகிறோம் என்ற பயம் இருந்ததாகவும் அப்படி இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆடையின்றி நடிக்கும் போது பயம் ஏற்பட்டது. எப்படி அந்த காட்சி வருமோ என்ற ஒரு உறுத்தல் இருந்தது. ஆனால் ஒரு பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது என்ற உணர்வு தான் மக்களிடம் எழுந்ததே தவிர தவறான எண்ணமோ கவர்ச்சியோ எழவில்லை என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.