தம்பி ஹீரோவுக்கு தலைவலியாக மாறிய இயக்குநர்!! எஸ்கேப்பாக இப்படிதான் செய்கிறாராம்..
தம்பி ஹீரோ
ஒரு படம் வருவதற்கு முன் அப்படம் 100 பாட்ஷா, 100 படையப்பா, 1000 கில்லி என்று உருட்டி பிரமோஷன் செய்வார்கள். ஆனால் அப்படம் கடைசியில் வெளியானப்பின் டைட்டிலுக்கு கூட வொர்த் இல்லாத படமாக மாறிவிடும்.

அந்தவகையில், பில்டப் கொடுத்தாலும் இயக்குநரே பிசினஸுக்கு வேட்டு வைத்த நிலையில், படம் வெளியாவதற்கு முன் ரிசல்ட்டை சொல்லிவிட்டு வேட்டு வைத்துவிட்டாரே என்று தம்பி நடிகர் புலம்பி வருகிறாராம்.
ஆரம்பத்தில் தொட்டதெல்லாம் தூள் பறக்கவிட்டு குடும்ப நடிகர்களின் படங்கள் எல்லாம் மெகா பிளாக் பஸ்டராகி வந்தநிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சூனியம் வைத்துவிட்டார்களா? ஏன் தொடர்ந்து மாறிமாறி தோல்விகளும் நஷ்டங்களுமே சந்தித்து வருகிறர் என்ற குழப்பம் குடும்பத்துக்கே இருந்துக்கொண்டு தான் வருகிறது.

எப்போது ஒரு படம் வெளியாகி தோல்வியை சந்தித்து அதிக ட்ரோல்களை தாங்கிக்கொள்ள முடியாதநிலையில், சில இயக்குநர்கள் அந்த படத்தை விடுங்க, அடுத்த படத்தில் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்துறேன் என்று கூறினால் ஆளவிடுங்கடா சாமி என்று சொல்வார்கள்.
ஆனால் அடுத்த படத்தை அதைவிட மோசமாக கொடுத்து அடிவாங்கும் பெரிய இயக்குநர்களும், சமீபகாலமாக சாபக்கேடாக மாறி வருகிறார்கள். இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன் இது என்னோட ரசிகர்களுக்கான படமில்லை என கிரேட் எஸ்கேபாக ஏகப்பட்ட உள்குத்துக்கள் தான் காரணம் என்று கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இதனால் தம்பி நடிகர் டோட்டல் அப்செட்டில் இருந்து புலம்பி வருகிறாராம்.