ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் வாங்கி பெருமை சேர்த்த மகன்!! கானா வினோத்தை கலாய்த்த ப்ளூ சட்டை..
கானா வினோத்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் ஃபினாலே-வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணப்பெட்டியோடு கானா வினோத் வெளியேறியதை அடுத்து, பலரும் அவர் வெளியேறியதை நினைத்து புலம்பி வருகிறார்கள்.

இதனையடுத்து கடந்த வாரம் சான்ட்ரா எவிக்ட்டாகி வெளியேறினார். இதன்பின், வீட்டிற்குள், ஆதிரை, கனி, எஃப்ஜே போன்ற போட்டியாளர்கள் உள்ளே வர, இன்றைய 100வது நாள் பிரமோ வீடியோ மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
ப்ளூ சட்டை
இந்நிலையில், பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை பற்றி பலரும் விமர்சித்து வரும்நிலையில், பணப்பெட்டியோடு வெளியேறி கானா வினோத்திற்கு அவரின் ஏரியா மக்கள் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக வரவேற்றனர்.

இதனை அறிந்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கி இந்தியாவிற்கு பெரிய சேர்ந்த தங்கமகன், நாடு திரும்பிய காட்சி, மக்கள் ஆரவார வரவேற்பு என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் உட்பட பலரும் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.