இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்டான்னு திட்டுவாங்க!! நடிகை புரோமோதினி ஓபன் டாக்...

Tamil Actress Tamil Web Series Actress Web series
By Jai Sep 12, 2026 02:30 AM GMT
Report

புரோமோதினி

ஜியோ ஹாட் ஸ்டார் வெப் தொடரில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரிஸ் தான் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். இந்த சீரியலில் கிரிஜா என்ற ரோலில் நடித்து வருபவர் தான் புரோமோதினி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ்ல என் எண்ட்ரி ரன் சீரியலில் நடித்தேன். அப்புறம் ரொம்ப பிரேக் ஆகிடுச்சு, திடீர்னு இந்த சீரிஸுக்காக அழைப்பு வந்துச்சு, முதல்ல பொன்மலர் ரோலுக்குத்தான் என்னை ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க.

இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்டான்னு திட்டுவாங்க!! நடிகை புரோமோதினி ஓபன் டாக்... | Brothers And Sisters Series Fame Actress Promodini

அதுக்காக ஆடிஷன் பண்னப்பின் கிரிஜான்னு ஒரு ரோல் இருக்கு அதுக்கும் ஆடிஷன் கொடுங்கன்னு சொன்னாங்க, அப்ப எனக்கு இந்த கேரக்டர் பத்தி எதுவும் தெரியாது. இயக்குநர் சிதம்பரம் சார் நான் கிரிஜா ரோலுக்கு செட்டானவர்னு சொன்னார். தெலுங்கில் நான் ரொம்ப நல்ல அம்மாவாகவும், பாசிட்டிவ் ரோலிலும் தான் நடிச்சிருக்கேன், எங்கேயாச்சும் தப்பா போயிடுமோங்கிற தயக்கம் இருந்துச்சு, டைரக்டர் சார் தான், நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, இதை ரொம்ப அழகா டிசைன் பண்ணிருக்கோம் என்று சொன்னார்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த மாதிரி பர்ஃபார்ம் பண்றதெல்லாம் ரொம்ப கஷ்டம். பர்ஃபார்மன்ஸ் பண்ண நிறைய இடம் இருக்கு, இந்த ரோல் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப ஹாப்பி.

இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்டான்னு திட்டுவாங்க!! நடிகை புரோமோதினி ஓபன் டாக்... | Brothers And Sisters Series Fame Actress Promodini

இன்னொரு குடும்பத்தை

என் கணவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான், அதான் இவ்ளோ சரளமா தமிழ் பேசுறேன், அவர் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்க, பெங்களூரில் காலேஜ் படிச்சிட்டிருக்காக்க என்றார். மேலும் ஜோதிகான்னு என்னை சொல்வதெல்லாம் இல்லைங்க, சிலர் அப்படி சொல்றாங்க, ஒரு விதத்துல பெரிய ஆர்ட்டிஸ்ட்டோட கம்பேர் பண்றது ஹாப்பின்னாலும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக புரோமோதினியா தெரியணும்னு தான் விரும்புகிறேன்.

இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்டான்னு திட்டுவாங்க!! நடிகை புரோமோதினி ஓபன் டாக்... | Brothers And Sisters Series Fame Actress Promodini

சிலர் இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்டான்னு சிலர் திட்டுறாங்க, ஆனா அதுவும் எனக்கு பிடிச்சிருக்கு, ஏன்னா, அந்தளவுக்கு மக்கள் மனசுல கிரிஜா கேரக்டர் பதிஞ்சிருக்குன்னு சந்தோஷம். இன்னும் சிலர் என் நடிப்பு நல்லா இருக்கும்ன்னும் என்னோட காஸ்டியூம்ஸ் நல்லா இருக்குன்னும் சொல்லுவாங்க என்று புரமோதினி தெரிவித்துள்ளார்.