மனைவியாக மாசத்துக்கு 25 லட்சத்திற்கு சம்பளம்! பிரபல நடிகையிடம் பேரம்பேசிய தொழிலதிபர்..
தெலுங்கு சினிமாவில் விஷ்ணு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நீத்து சந்திரா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த அவர் நடிகர் விஷால் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் பணக்காரப்பெண்ணாக நடித்திருப்பார்.
இப்படத்தினை அடுத்து தமிழில் வரவேற்பு கிடைக்காமல் பாலுவுட் பக்கம் சென்று ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட ஆரம்பித்தார். தற்போது 38 வயதாகியுள்ள நீத்து சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் கண்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
13க்கும் மேற்பட்ட தேசிய படங்களில் நடித்துள்ளேன் இன்று வரை வாய்ப்புகள் இல்லாமலும் வேலை இல்லாமல் இருக்கிறேன். அப்படி ஒரு தொழிலதிபர் என்னிடம் வந்து மாதத்திற்கு 25 சம்பளம் கொடுக்கிறேன் மனைவியாக வரச்சொன்னார்.
இதனால் முகுந்த வேதனையில் இருக்கிறேன். இதனை அடுத்து ஒரு இயக்குனர் நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரவில்லை என்று படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்று மன வருத்துடன் நீத்து சந்திரா குறிப்பிட்டுள்ளார்.