ஓடும் காரில் நடிகையிடம் தவறாக நடந்து கதறவிட்ட ஓட்டுநர்.. கோபத்தில் மனவா நாயக் செய்த செயல்..
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தும் இயக்குனராக ஒருசில படங்களை இயக்கியும் இருந்தவர் நடிகை மனவா நாயக். வேலை விசயமாக கார் புக் செய்து நள்ளிரவில் சென்றுள்ளர். காரில் ஏறிய நடிகை கார் ஓட்டுநர் செல்போனில் பேசியபடி காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
இதனை நடிகை கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எதுவும் கேட்காத ஓட்டுநர் போக்குவரத்து காவலரிடம் சிக்கி வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
கார் உள்ளே இருந்த நடிகை சமாதனப்படுத்தி இருந்த நிலையில் நடிகையை கண்டபடி திட்டியிருக்கிறார் கார் ஓட்டுநர். மேலும் காரை வேகமாக ஓட்டி இன்னொரு நபரையும் அழைத்து சென்றிருக்கிறார்.

இதனால் பயந்து போன நடிகை மனவா காரை நிறுத்தும் படி கூறியும் நிறுத்தாததால், வேறுவழியில் காரை இயக்கத்தால் கதறியுள்ளார்.
ஓடும் காரில் காப்பாற்றும்படி கத்திய நடிகையை பார்த்த வாகன ஓட்டிகள் காரை வழிமறித்து நடிகையை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் பயந்து போன நடிகை மும்பை காவல் நிலையத்தி பேஸ்புக் கணக்கை டேக் செய்து பதிவினை போட்டுள்ளார்.இதன்பின் ஓட்டுநரை கைது செய்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
— Manava Arun Naik (@Manavanaik) October 15, 2022