தங்கமா பித்தளையா? பித்தலாட்டம் செய்த வேட்பாளர்! ஒரு ஓட்டுக்காக இப்படியா..

candidate elction
By Jai Oct 11, 2021 11:39 AM GMT
Report

காஞ்சிபுரம் குன்றத்தூர் அடுத்த பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஓட்டு போடுமாறு தங்கம் என கூறி பித்தளையை கொடுத்து ஏமாற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் குன்றத்தூர் பகுதியில் தங்கம் என கூறி ஓட்டு சேகரித்துள்ளார் பெண் வேட்பாளர் ஒருவர்.

ஓட்டு போட்ட பின் தங்கத்தை வாங்கிய மக்கள் சீட்டு கடையில் வைத்து பணம் வாங்க சென்ற போது அது தங்கம் இல்லை பித்தளை என்று கூறியுள்ளார்களாம். இதுகுறித்து மக்கள் பலர் தேர்தலை நிறுத்தி மறுதேர்தல் நடத்த கேட்டும் குறித்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கேட்டு வந்துள்ளனர்.

வீடியோ..