போன வாரம் விக்ரம், இந்த வாரம் ஆர்யா..சோகத்தில் நடிகர்கள்

Arya
By Tony Sep 09, 2022 03:34 AM GMT
Report

 ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

அதை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வந்த அரண்மனை 3 கூட வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்த்த கேப்டன் படம் இந்த வாரம் திரைக்கு வந்தது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நினைத்தார்கள்.

ஆனால், படம் மிக மோசமான வசூலை பெற்றுள்ளது. போன வாரம் விக்ரம் படம் கோப்ரா படுதோல்வியடைய இந்த வாரம் ஆர்யா படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.