வாய்ப்பு வேணும்னா இத்தனை பேருடன் அட்ஜெஸ்ட் செய்யவேண்டும்!! அதிர்ச்சியான சீரியல் நடிகை ரத்தன்..
ரத்தன் ராஜ்புத்
சமீபகாலமாக சினிமாத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பல நடிகைகள் ஓப்பனாக பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பாலிவுட்டில் சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து நடிகை ரத்தன் ராஜ்புத் தென்னிந்திய சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அக்லே ஜனம் மோஹே பிட்டியா ஹி கிஜோ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்தன் ராஜ்புத், மகாபாரத் தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர்.
தென்னிந்திய திரைப்படத்துறை
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தென்னிந்திய திரைப்படத்துறையை மக்கள் மிகவும் சிறந்ததாக கருதுகிறார்கள். ஆனால் அங்கேயும் காஸ்டிங் கவுச் மிகவும் பரவலாக காணப்படுகிறது.
லாலி என்ற ரோலில் நடித்தபோது தென்னிந்திய திரைப்படத்துறையில் இருந்து நடிக்க பல அழைப்புகள் வந்தது. இருப்பினும் அவர்கள் அனைவரும் என்னிடம் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டார்கள். எனக்கு தெற்கிலிருந்து சில சிறந்த இயக்குநர்களிடம் இருந்து பல அழைப்புகள் வந்தன.
அட்ஜெஸ்ட் செய்யவேண்டும்
ஆனால் அதனுடன் அவர்கள் நீங்கள் கொஞ்சம் எடை அதிகரிக்க வேண்டும், நீங்கள் மிகவும் மெலிதாக இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். இந்த கோரிக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு நான் எடையை அதிகரிக்க சம்மதித்தேன்.
அதன்பின் பேச்சு வேறு திசையில் திரும்பி, ஒருவர் எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, விதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியும் அல்லவா என்று கேட்டார். நான் அதிர்ச்சியாகி, என்ன விதி என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் தெற்கில் நிலைக்க வேண்டுமென்றால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் இன்னும் ஒருவருடன் அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தது, இப்போது அவர் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். DOP-உடன் அட்ஜெஸ்ட் செய்யவேண்டும் என்றது நான் அந்த வாய்ப்பை நிராகரித்து வந்துவிட்டேன் என்று ரத்தன் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
ஓகே சொல்லியிருந்தால்
மேலும், நான் அந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருந்தால் இன்று சூப்பர்ஸ்டார் ஆகியிருப்பேன். அதிலிருந்து எனக்கு தெற்கில் இருந்து வாய்ப்புவரவில்லை. ஏனென்றால் அழைக்கும்போதெல்லாம் இதே வார்த்தையை பேசினார்கள்.
நான் ஒப்புக்கொள்ளாததால் வாய்ப்பு கொடுக்கவில்லை. முதலில் தெற்கிலிருந்து எந்த வாய்ப்பு வந்தாலும் அருவருப்பாக இருந்தது. அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு சமரசன் செய்து கொள்ள என்னால் முடியது. மக்கள் பாலிவுட்டில் என்ன பேசுகிறார்களோ, அதுவே தெற்கிலும் நடக்கிறது என்று ரத்தன் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.