தேசிய விருது இருக்கட்டும்.. கொண்டாட்டத்திலும் முறைத்து கொண்ட ஹரிஷ் - எம்.எஸ்.பாஸ்கர்

Harish Kalyan Viral Video M. S. Bhaskar
By Bhavya Aug 06, 2025 06:30 AM GMT
Report

பார்க்கிங்

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பார்க்கிங்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இரு நபர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ அதன்மூலம் வரும் சண்டை, அதனால் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பார்க்கிங் படத்தில் ராம்குமார் அழகாக காமித்துள்ளார்.

தேசிய விருது இருக்கட்டும்.. கொண்டாட்டத்திலும் முறைத்து கொண்ட ஹரிஷ் - எம்.எஸ்.பாஸ்கர் | Celebration Video Of Parking Movie

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மேலும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-யின் பின்னணி இசை திரைக்கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது.

வைரல் வீடியோ 

இந்நிலையில், சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு இதை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் படத்தில் எப்படி பாம்பும் கீரியுமாக இருந்தார்களோ அது போல், கேக் வெட்டும் போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, தாக்குவது போல் விளையாட்டாக செய்தார்கள். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.