விவாகரத்து பெற்று தனிமையில் வாழும் விஜய் டிவி பிரபலங்கள்.. ஒரு வருடம் மட்டும் தாக்கு பிடிக்காத டிடி
சினிமா நட்சத்திரங்களை தாண்டி சின்னத்திரை தொலைக்காட்சி பிரபலங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
அதில் விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரையில் அவர்களே காதலை உருவாக்கி அவர்களே திருமணத்தையும் முடித்து வைப்பார்கள். ஆனால் காதலித்து திருமணம் செய்த சிலர் விவாகரத்து பெற்று பிரிந்து தனிமையில் வாழ்ந்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், செந்தில் - ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆலியா உள்ளிட்ட பல ஜோடிகள் நிலைத்துள்ளனர். இதில் யார் திருமணமாகி விவாகரத்து பெற்றார்கள் என்று பார்ப்போம்.
சின்னத்திரை ராணியாக திகழ்ந்து ரசிகர்களை கவனம் ஈர்த்து வரும் டிடி, பல கால நண்பர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது தனிமையில் வாழ்ந்தும் வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே ரம்யா 2014ல் அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். தற்போது தனிமையில் வாழ்ந்தும் வேலை செய்தும் வருகிறார்.
பிக்பாஸ் 6ல் சென்றுள்ள விஜே மகேஸ்வரி திருமணமாகி ஒரு மகனை பெற்ற ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
சின்னத்திரை சீரியல் நடிகையாக பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை மேக்னா. டான் டோனி என்பவரை திருமணம் செய்து சொஇல ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
சீரியல் நடிகையாக கனா காணும் காலம் மூலம் பிரபலமானவர் ஹரிபிரியா. நடிகர் விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக மகன் இருக்கும் போது விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.