முதலமைச்சரான C.ஜோசப் விஜய்!! ஸ்டாலின் முதல் பூஜா ஹெக்டே வரை..பிரபலங்களின் வாழ்த்துகள்...
Pooja Hegde
C Joseph Vijay
By Jai
C.ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து பெரும்பான்மையுடன் தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவுப்பு வந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய், C ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சரான ஜோசப் விஜய்க்கு, முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின், ராகுல் காந்தி முதல் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்துகள் கூறி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.












