4000 ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்.. பயத்தை காட்டிய முன்னாள் டிவிட்டர் நிறுவனத்தின் CEO
சில மாதங்களுக்கு முன் உலகின் டாப் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் கொடுத்து வாங்கி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். சில அரசியல் சூழ்ச்சியால் டிவிட்டர் நிறுவனத்தின் CEO ஜாக் டோர்சி தானாகவே பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.
அதேசமயம் டிவிட்டரை விற்ற படத்தை வைத்து டிவிட்டருக்கு இணையான ப்ளூ ஸ்கை என்ற புதிய செயலியை தொடங்கவுள்ளார். இதனை அனைத்து தளங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஜாக் வடிவமைத்திருக்கிறார்.
இதனால் பயந்து போன எலான் மஸ்க், ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்களை எச்சரித்து இருக்கிறார். 10 ஆயிரத்திற்கும் மேல் டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் குறைந்தது 4 ஆயிரம் ஊழியர்களை வேலைவிட்டு தூக்க முடிவெடுத்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அலுவலத்தில் இருந்தாலும் வீடு திரும்பினாலும் தயவு செய்து வீட்டுக்கு திரும்புங்கள் குறித்த செய்தி வரும் என்று ஊழியர்களுக்கு மெயிலும் செய்திருக்கிறார் எலான் மஸ்க். இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆப்பு வைத்து அனுப்ப வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.