நீங்க ஹீரோயினை அடிச்சதெல்லாம் பார்த்திருக்கேன்!! பாலா முன்பே ஓபனாக பேசிய நடிகை..

Gossip Today Bala Tamil Actress Actress
By Edward Feb 09, 2026 10:30 AM GMT
Report

இயக்குநர் பாலா பற்றி அப்போதில் இருந்தே பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வரும். அப்படி தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களை அடிப்பார் என்றும் அவருடன் பணியாற்றிய பலர் கூறி வந்தனர்.

சமீபத்தில் கூட வணங்கான் படத்தில் பாதி ஷூட்டிங்கில் இருந்து சூர்யா வெளியேறி அருண் விஜய் கமிட் செய்யப்பட்டு நடித்து படம் வெளியானது. சூர்யா வெளியேற அவர் கொடுமைப்படுத்தியதுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

நீங்க ஹீரோயினை அடிச்சதெல்லாம் பார்த்திருக்கேன்!! பாலா முன்பே ஓபனாக பேசிய நடிகை.. | Chaitra Brings Up Bala S Controversial Past

இந்நிலையில், மை லார்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாலா. விழாவில் பேசும்போது புதிய பாலாவை பார்க்க முடிந்தது. பொதுவெளியில் தன்னை பெரியளவில் பேசி முன்னிறுத்திக்கொள்ளாதவர், இம்முறை கலகலப்பாக பேசி இயல்பாகவே இடம் பிடித்துவிட்டார்.

chaitra-brings-up-bala-s-controversial-past

படத்தின் ஹீரோயினான சைத்ராவின் நடிப்பை பாராட்டினார். பாலா பேசிமுடித்தப்பின் நடிகை சைத்ரா ஜே அச்சார், நீங்கள் ஹீரோ, ஹீரோயின்களை எல்லாம் அடிச்சதெல்லாம் நான் பார்த்தேன், நாங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்கும் என்று கூப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட பாலா சிரித்துக்கொண்டே தலையாட்டி அந்த சூழலை சமாளித்துள்ளார். சைத்ரா பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.