சைத்ரா ரெட்டியின் மூக்கில் குத்திய நடிகர்.. அட, பாவி
யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்த இவருக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சன் டிவிக்கு வந்த நடிகை சைத்ரா, தற்போது கயல் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதுமட்மின்றி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கயல் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் அவினாஷுடன் இணைந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது ரீல்ஸ் வீடியோ செய்யும் பொழுது, எதிர்பாராத விதமாக அவினாஷின் கை, சைத்ராவின் முகத்தில் அடித்துவிடுகிறது. இந்த வீடியோவை நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..