கேட்ச் பிடிக்க முயன்று 4 பற்கள் போச்சு.. இலங்கை வீரருக்கு நேர்ந்த சோகம்! வைரல் வீடியோ
விளையாட்டில் விபத்துகள் நடப்பதும் சாதாரண ஒன்று தான். பந்து பட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.
ஆனால் தற்போது இலங்கை ப்ரீமியர் லீக் போட்டியில் Kandy Falcons அணிக்காக ஆல் ரவுண்டர் சமிகா கருணரத்னே விளையாடி வருகிறார். அவர் இதற்கு முன் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 18 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
4 பல் போச்சு
நேற்று முன்தினம் நடந்த லங்கா பிரிமியர் லீக் போட்டியில் அவர் கேட்ச்சை பிடிக்க செல்கிறார், ஆனால் அவர் பந்தை பிடிக்க தவறியதால் அது அவரது வாய் மீது விழுந்து 4 பற்கள் போய்விட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
சமிகா கருணரத்னேவுக்கு 30 தையல்கள் போடப்பட்டு பற்கள் மீண்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிகிச்சைக்கு பின் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். 4 பற்கள் இழந்ததை அவரே இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்திருக்கிறார்.
Chamika Karunaratne lost 4 teeth while taking a catchpic.twitter.com/WFphzmfzA1
— Out Of Context Cricket (@GemsOfCricket) December 8, 2022