இருமுறை விவாகரத்து செய்த 47 வயதான நடிகைக்கு ரகசியமாக உதவும் நடிகர் விஷால்? இதுதான் காரணம்..

Vishal Serials Indian Actress
By Edward Jul 04, 2022 07:20 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் க்ளாமர் குயினாக புகழ் பெற்றவர் நடிகை சர்மிளா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்த சர்மிளா, 1995ல் கிஷோர் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் 4 ஆண்டுகள் மட்டுமே நிலைத்த நிலையில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதைதொடர்ந்து ராஜேஷ் என்பவரை 2006ல் திருமணம் செய்து கொண்ட சர்மிளா 10 ஆண்டுகளுக்கு பிறகு 2016ல் விவாகரத்து செய்து பிரிந்தார். ஒரே மகன் இருக்கும் நிலையில் சர்மிளா துபாயில் பல கஷ்டங்களை பட்டுள்ளேன் என்று நடிகை ஷகிலாவுடன் நடத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

தற்போது சீரியல்களில் நடித்து வரும் சர்மிளா தன்னுடைய மகனின் 6 வருஷ ஸ்கூல் பீஸ் முதல் என்னுடைய வீட்டின் பாத்ரூம் கட்டிடம் வரை விஷால் தான் உதவி செய்துள்ளார் என்று சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். தற்போது சர்மிளாவின் மகன் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery