வைரலாகும் கெனிஷா - ரவி மோகன் வீடியோ? பிரபலம் சொன்ன ரகசியம்..

Gossip Today Kenishaa Francis Ravi Mohan
By Jai Sep 09, 2026 01:30 PM GMT
Report

ரவி மோகன் - கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி வந்த நிலையில் கோவாவில் ஒன்றாக மாறிமாறி சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் பேசி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சே குவேரா யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் இந்த வீடியோ வெளியானதற்குப்பின் ரவிமோகனுடைய இமேஜே மொத்தமாக காலி ஆகிடுச்சு, ஏன்னா லட்சக்கணக்கான பேர், கோடிக்கணக்கான பேர் இந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள்.

இதுவரை அவரிடமிருந்து மறுப்பு, விளக்கம் எதுவும் வரவில்லை. ரவிமோகனை டேமேஜ் பண்ணி யாருக்கு என்ன கிடைக்கப்போகுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நான் சமீபத்தில் பார்த்த விஷயங்களை எடுத்துக்கிட்டா, அடுத்தடுத்து ரவி மோகன் குறித்து சர்ச்சைகள் வந்துக்கிட்டே இருக்கு.

குறிப்பா இந்த கெனிஷாவுடன் துபாய்க்கு போன விஷயம், அங்க நடந்த பிரச்சனை பற்றி தான். இருவரும் ஒன்றாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்கு, கெனிஷாவை யோகி பாபு நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக்கி இருக்கிறார். கெனிஷாவால் இதுமட்டும் பிரச்சனை இல்லை, ரவி மோகன் நடித்துள்ள கராத்தே பாபு படத்திற்கும் பிரச்சனை.

இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியின் மகள் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங், பணிகள் அனைத்தும் முடிவடைந்தப்பின், அந்த கதாநாயகியை மாற்ற வேண்டும் என்று ரவி மோகன் கேட்டிருக்கிறார். இதன் காரணமாகவே கராத்தே பாபு படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சே குவேரா தெரிவித்துள்ளார்.