நான் இறக்கவில்லை..இதனால் தான் ஃபைனலுக்கு வரல!! செஃப் தாமு விளக்கம்...
செஃப் தாமு
பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து பல தேசிய விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர் தான் செஃப் தாமு. இந்த வாரம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியோடு நிறைவடையவுள்ள குக் வித் கோமாளி 5 சீசனில் நடுவராகவும் இருந்து வந்தார். இந்நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு செஃப் தாமு பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தாமு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். தற்போது செஃப் தாமு இறந்துவிட்டார் என்று அதனால் தான் குக் வித் கோமாளி 5 கிராண்ட் ஃபினாலேவுக்கு கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் இறக்கவில்லை
இதனை அறிந்த தாமு, சமீபத்தில் நான் இறந்துவிட்டதாக வதந்திகள் வந்துக் கொண்டிருந்தது. தேவையில்லாதவர்கள் இதைப் பரப்புகிறார்கள். நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். காலில் ஊசி செலுத்தியதால் தனியார் நிகழ்ச்சியின் செமி ஃபைனலுக்கு பங்கேற்க முடியவில்லை, ஃபைனலில் பங்கேற்றேன், உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்று செஃப் தாமு கூறியிருக்கிறார்.