கடலை-யே கடல் போல் சூழ்ந்திருக்கும் மழைநீர்...சென்னை மெரினா கடற்கரையின் நிலை இதுதான்!
tamilnadu
chennairains
sarpattamemes
merinabeach
By Edward
சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் முழங்கால் வரை தேங்கி நிற்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். பல்வேறு பகுதிகளில் சுரங்கபாதைகள் முற்றிலும் மூழ்கியுள்ளது.
அதுபோலவே சென்னை மெரினா கடற்கரையிலும் மழைநீர் தேங்கி கடல் எது என்பதே தெரியாதது போல் காட்சியளிக்கிறது. மழைநீரை அப்புறப்படுத்தும் வேளையில் சம்மந்தப்பட்ட துறை இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Marina Beach flooded due to the incessant rain. @aselvarajTOI pic.twitter.com/R1hQNyyBku
— Selvaraj Arunachalam (@selvasuha) November 8, 2021