விஜய்யை புகழ்ந்து பேட்டி..ராதாவிடம் தப்பிக்க அம்பிகா போட்ட பிளான்!! பிரபலம் சொன்ன தகவல்..
ராதா - அம்பிகா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ராதா மற்றும் அம்பிகா இருவரும் திகழ்ந்து வந்தனர். தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்ததும் என் அக்கா அம்பிகாவுக்கு ஃபோன் பண்ணேன், ஆனா அவங்க என் போனை எடுக்கவே இல்லை. அதனால்தான் வேற வழியில்லாம புகார் கொடுத்தேன் என்று ராதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, நடிகை அம்பிகா சமீப நாட்களில் விஜய்யை புகழ்ந்து பேசினார். இவர் தவெகவில் சேரப்போகிறாரா? என்று எனக்கு தோன்றியது. திரிஷாவையும் எச்சரித்தார். அதேசமயம் திரிஷாவுக்கு எதிராக பேசி அதனையும் கண்டித்திருந்தார். விஜய் சேதுபதி பேசியதை வைத்தும் அவர் காட்டமாக விஜய்க்காக பேசினார். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதுதான் அந்த பேச்சுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று புரிகிறது.

46 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு வந்திருக்கிறது. ஏ ஆர் எஸ் கார்டன் என்ற ஸ்டூடியோ வளசரவாக்கத்தில் இருக்கிறது. அதுதான் சினிமாக்காரங்க ஏரியா. 365 நாட்களும் அந்த ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கும். ராதா மீதும் அம்பிகா மீதும் அவர்களது அம்மாவுக்கு பெரிய பாசம். சினிமாவில் பெரியாளாக்கிட வேண்டும் என்று உழைத்தார். படிப்பெல்லாம் படிக்கவில்லை, நடிப்புதான் முக்கியம் என்று பார்த்தவர் இருவரின் அம்மா.
அந்த கார்டன் 40 ஏக்கர் இருக்கும், சென்னையின் மையப்பகுதியில் இருக்கு. எம்ஜிஆர் தான் அதை தானமாக கொடுத்தார் என்று பேசியவர்களுக்கு கூட சமீபத்தில் தான் அம்பிகா தரமான பதிலடி கொடுத்தார்.

ராதாவின் கணவர் மிகப்பெரிய தொழிலதிபர், மொத்தம் 5 ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கு. ராதா மற்ற தொழில்களை கவனிப்பதற்காக வெளிநாட்டுக்கு எல்லாம் அதிகமா சுற்றுவார். குறுகிய காலத்தில் ராதா பெரிய நட்சத்திரம் ஆனார். இந்த செக் மோசடி விவகாரம் வங்கி மேலாளர் மூலம் தான் தெரியும். இந்த மோசடியை ராதாவுக்கு அம்பிகா செய்திருந்தால் அது கண்டிப்பாக குற்றம் தான் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.