முன்னணி நடிகர்களுக்கு மகள்களாக நடித்த குட்டி சிறுமிகள்!! 25 வயதில் சூர்யா ரீல் மகள் பார்க்கும் வேலை..
தென்னிந்திய சினிமாவில் குட்டி குழந்தைகளாக சில படங்களில் நடித்து பிரபலமாகி அதன்பின் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற்று இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறார்கள். அப்படி குட்டி நட்சத்திரங்களாக டாப் நடிகர்களின் படத்தில் பிரபலமானவர்கள் லிஸ்ட்டை பார்ப்போம்.
சாரா அர்ஜுன்
சியான் விக்ரம் நடிப்பில் 2011ல் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் மூலம் தன்னுடைய 5 வயதில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜுன். இப்படத்தில் சிறுப்பாக நடித்து தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி குந்தவை ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். தற்போது 17 வயதாகி கிளாமராக நடித்து ஷாக் கொடுத்து வருகிறார்.
எஸ்தர் அனில்
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், கமல் ஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். திரிஷ்யம் படங்களில் நடித்து பிரபலமான 21 வயதான எஸ்தர் அனில் வி 3 படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் கிளாமர் போட்டோஷூட் மூலம் வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார்.
ஸ்ரேயா சர்மா
சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுன்னு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு ரோலில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் ஸ்ரேயா சர்மா. இப்படத்திற்கு அடுத்தடுத்த தென்னிந்திய படங்களில் நடித்து வந்தார். காயடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையான ஸ்ரேயா சர்மா தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பணியை செய்து வருகிறார். இதற்கிடையில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
அனிகா சுரேந்திரன்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவருக்கு தந்தையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் அனிகா சுரேந்திரன். விஸ்வாசம் படத்திற்கு பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா போகப்போக கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது 18 வயதை எட்டிய அனிகா, கதாநாயாகியாக ஒருசில படங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.