சின்மயி அபார்ஷன் பண்ணா உனக்கு என்ன?.. சுசி லீக்ஸ் குறித்து பேசிய சின்மயின் அம்மா..
கடந்த 2016ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா சுசி லீக்ஸ் மூலமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, 'சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது அதனால் இப்படி செய்து விட்டார் என்றும் தன்னிடம் சுசித்ரா மன்னிப்பு கேட்டு ஒரு இமெயில் அனுப்பினார்' என்று சின்மயி தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் சுசித்ரா மீண்டும் சுசி லீக்ஸ் தொடர்பாக பேசி, மீண்டும் புயலை கிளப்பிவிட்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சின்மயின் அம்மாவிடம், "சுசி லீக்ஸ் ஒரு பிராங்க் என்று சுசித்ரா சொன்னார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?" என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், சுசி லீக்ஸ் prank ஆ?.. என்ன prank அது. ஏன் இந்த தேவை இல்லாத வேலை. நீ எதுக்கு அதெல்லாம் எடுத்துட்டு வார..
சின்மயி பற்றி சம்பந்தம் இல்லாத விஷயத்தை ஏன் எடுத்துட்டு வரணும். சின்மயி அபார்ஷன் பண்ணா என்று சொன்னது எல்லாம் prank ஆ .. அவளுக்கு அபார்ஷன் ஆன உனக்கு என்ன?.. சின்மயி அப்படி எல்லாம் பண்ணல.. அவள் எப்போதும் தனியா தான் இருப்பாள். அவளுடைய வேலையை மட்டும் தான் பார்ப்பாள் என்று சின்மயி தாயார் கூறியுள்ளார்.