சரிகமப 5!! இறுதி வாய்ப்பை இழந்தும் தேவயானி மகள் கொடுத்த ரியாக்ஷன்..
சரிகமப 5 Top 6
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே, சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன் என 4 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கடைசியாக 5வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்கான Ticket to finale ரவுண்ட் நடந்துள்ளது.

அதில் ஷிவானி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 6வது இறுதி சுற்றுப்போட்டியாளர் இருப்பதாக நடுவர்கள் தெரிவித்த நிலையில், யார் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. அப்படி சிறப்பாக பாடிய பவித்ரா 6வது ஃபைனலிஸ்ட் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேவயானி மகள் இனியா
ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே சுற்றில் பாடிய நடிகை தேவயானி மகள் இனியா தேர்வு செய்யப்படாமல் போனது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பவித்ரா தேர்வானதை சந்தோஷமாக கொண்டாடி தன்னுடைய முதிர்ச்சியை காண்பிடித்திருக்கிறார் தேவயானி மகள் இனியா.

அவர் பேசுகையில், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த மேடை எனக்கு ஒரு அங்கீகாரத்தையும் மக்கள் மத்தியில் ஒரு பிரபலத்தையும் கொடுத்திருக்கிறது. என் பெற்றோர், என் சந்தோஷத்திற்காக என்ன வேணாலும் செஞ்சுக்கோ என்று சொல்லிட்டாங்க.
அதனால் நான் மக்கள் முன் என் திறமையால் பிரபலம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன், அது இப்போ நடந்துடுச்சு, எனக்கு இதுவே போதும் என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய பவித்ரா, எனக்கு வாழ்க்கயில் பல ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் கிடைத்திருந்தாலும், இந்த மேடை என் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறது என்று உருக்கத்துடன் பேசியிருக்கிறார் பவித்ரா.