நீங்கள் ஏன் கணவரை விவாகரத்து செய்யக்கூடாது.. கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த சின்மயி..
நிதி அகர்வால்
நடிகை நிதி அகர்வால், நடிகர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவர் கிட்ட நெரிசலில் சிக்கி கஷ்டப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் செயலை கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

சின்மயி கருத்து
இதற்கு பாடகி சின்மயி, கழுதைப்புலிகளை விட மோசமாக நடந்துகொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள்.
உண்மையில், கழுதைப்புலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரு கும்பலாகச் சேர்த்தால், அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள். ஏதாவது ஒரு கடவுள் இவர்களையெல்லாம் அழைத்துச் சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது? என்று ஒரு பதிவினை போட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவர், நீங்கள் ஆண்களின் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டவராக இருந்தால், ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழக்கூடாது, அது இன்னும் சிறப்பாக இருக்குமே என அவர் கலாய்த்து கருத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு சின்மயி, நான் அந்த ஆண்களைப் போல பாலியல் குற்றவாளியை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களில் ஒருவரைப் பெற்றெடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? நான் பாலியல் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
நீங்கள் ஏன் அவர்களைப் பாதுகாக்க ஓடி வருகிறீர்கள்? நீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு குழந்தையையோ பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவரா என்று பதிலடி கொடுத்துள்ளார் பாடகி சின்மயி.