சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட் : இந்து - கர்ணா இடையே மீண்டும் வெடிக்கும் சண்டை... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் மணப்பெண்!

Serials Tamil TV Serials
By Karthick Raja Nov 17, 2026 03:30 AM GMT
Report

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் 'சின்னஞ்சிறு கிளியே'. இந்தத் தொடரில் தற்போது கல்யாணத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்றைய எபிசோடில் நடக்கப்போகும் பரபரப்பான விஷயங்களைப் பார்க்கலாம்.

இந்து - கர்ணா இடையே மீண்டும் வெடிக்கும் சண்டை!

வீட்டுக்கு வரும் கர்ணாவிடம், இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்றும், அதற்காக கமிஷனர் ஆபீஸுக்குப் போய் புகார் கொடுக்கலாம் என்றும் பேசுகிறார்கள். இதற்கிடையில் இந்துவுக்கும் கர்ணாவுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது இந்து, "நீ இன்னும் உங்க அண்ணன் பேச்சைக் கேட்டுக்கிட்டே இப்படித்தான் நடந்துக்கப் போறியா?" என்று கோபமாகக் கேட்கிறார். இதற்கு கர்ணாவும் பதிலுக்குக் கத்துகிறார். இதனால் இன்னும் ஆத்திரமடையும் இந்து, "இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

இதனால் வருத்தமடையும் கர்ணா, இந்துவை இவ்வளவு கடுமையாகத் திட்டிவிட்டோமே, அவள் நம்மைப் புரிந்துகொள்ளவே மாட்டேங்கிறாளே என்று பாண்டியிடம் சொல்லி புலம்புகிறார்.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட் : இந்து - கர்ணா இடையே மீண்டும் வெடிக்கும் சண்டை... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் மணப்பெண்! | Chinnanjiru Kiliye Serial Today Episode

தடபுடலாக நடக்கும் கல்யாண ஏற்பாடுகள்!

மறுபக்கம் வீட்டில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. பந்தல் போடுவது, புடவை எடுப்பது, கேட்டரிங் ஏற்பாடு செய்வது என ஒவ்வொரு வேலையாக கிருபாகரன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர் சொல்வதையெல்லாம் ஜெயந்தியே நோட்ஸ் எடுக்கிறாள்.

மேலும், "எல்லா வேலையும் சரியாக நடக்கணும். கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக முடியணும்" என்று ஒவ்வொரு பொறுப்பாக ஒப்படைக்கிறார் கிருபாகரன்.

இந்துவைச் சமாதானப்படுத்தும் பாண்டி!

கோபத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார் இந்து. அப்போது அங்கு வரும் பாண்டி, இந்துவிடம் பேசுகிறார்.

"உங்களுக்கு இன்னும் எங்களுடைய திட்டம் புரியவில்லை. நாங்க ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கோம். கொஞ்சம் பொறுமையாக இருந்து நாங்க சொல்றதைக் கேளுங்க. கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்" என்று சொல்லி இந்துவைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.

புகார் கொடுக்கச் சென்றவர்கள் திரும்பி வந்ததால் அதிர்ச்சி!

இதற்கிடையில் கமிஷனர் ஆபீஸுக்குப் புகார் கொடுக்கச் சென்றவர்கள் திடீரென வீட்டிற்கே திரும்பி வருகிறார்கள். இதைப் பார்த்த பாண்டியும் கர்ணாவும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியடைகிறார்கள்.

வந்தவர்கள் இருவரையும் மிரட்டி, மீண்டும் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்து அங்கேயே உட்கார வைக்கிறார்கள். இதனால் வீட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்படுகிறது.

சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட் : இந்து - கர்ணா இடையே மீண்டும் வெடிக்கும் சண்டை... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் மணப்பெண்! | Chinnanjiru Kiliye Serial Today Episode

திடீரென மருத்துவமனைக்குச் செல்லும் மணப்பெண்!

இதற்கிடையில் நாளை புடவை எடுக்கச் செல்ல வேண்டும் என்று வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது திவாகரும் அங்கே இருக்கிறார். ஹாஸ்பிடல் குறித்து சொல்ல கிருபா போயிட்டு வா என மணப்பெண்ணுக்கு அனுப்பி வைக்கிறார்.

இனி என்ன நடக்கப்போகிறது?

மணப்பெண்ணை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல காரணம் என்ன? கர்ணா, இந்துவின் மோதல் முடிவுக்கு வருமா? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.