கார் விபத்துல இறந்தது நாங்க அவன் தான்!! பாடகி சின்னப்பொண்ணு ஓபன் டாக்
பாடகி சின்னப்பொண்ணு
தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞராக இருந்து பாடகியாக பல பாடல்களில் பாடி வரும் பாடகி சின்னப்பொண்ணு, தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியொன்றில், நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பியபோது பெரிய கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான் என் கணவரும் செத்துப்பிழைத்தோம். நாங்கள் இருவரும் விபத்தில் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியானது.
அந்தளவிற்கு விபத்து பெரிய விபத்தாக இருந்தது. இது கனிமொழி கவனத்திற்கு செல்ல, உடனே ஆட்களை அனுப்பி சின்னப்பொண்ணுக்கு என்ன ஆனது என்று பார்க்க சொல்லி, எனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் செய்யச்சொன்னார் கனிமொழி.
அதன்பின் சங்கமம் நிகழ்ச்சியில் என்னை பார்த்து விசாரித்து, சில கருத்துக்களை கூறியதாக அந்த பேட்டியில் சின்னப்பொண்ணு தெரிவித்திருந்தார்.
என் அத்தை மகன்
மேலும், வேறொரு பேட்டியொன்றில், கார் மீது பஸ் மோதிய விபத்தில் அதே இடத்தில் இறந்தது நாங்கள் இல்லை, என்னுடைய அத்தையின் மூத்த மகன் தான். அதன்பின் அளவுக்கு மீறிய கவலைகள், கஷ்டங்கள் இருந்தது என்று சின்னப்பொண்ணு தெரிவித்திருத்திருக்கிறார்.