இதிலும் கீர்த்தி தங்கச்சியா! 66 வயது நடிகருக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா?

keerthysuresh chiranjeevi tamannaah bholo shankar meher ramesh
By Edward Nov 09, 2021 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்தின் பல படங்கள் மற்றமொழிகளில் ரீமேக்காகி வருகிறது. அப்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் 66 வயதான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போலோ சங்கர் என்ற டைட்டிலில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதாபாத்திரங்களின் தேர்வுகளை இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்ததால் இப்படத்தில் கோடிகளில் சம்பளம் கேட்டு கமிட்டாகினார்.

இந்நிலையில் வேதாளம் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரத்திற்கு யார் தெலுங்கி நடிப்பார்கள் என்ற ஆர்வம் இருந்து வந்த நிலையில் நடிகை தமன்னா ஒரு டிவிட்டினை போட்டுள்ளார். அதில், போலோ சங்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து ஸ்ருதி ரோலில் நடிகை தமன்னா கமிட்டாகியுள்ளாராம்.