இந்த அசிங்கம் தேவையா!! விஜய் பட தயாரிப்பாளரை கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்!! விழுந்து சிரித்த கீர்த்தி, தமன்னா..

Keerthy Suresh Tamannaah Viral Video Chiranjeevi Gossip Today
By Edward Aug 08, 2023 03:23 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் மெகா சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சிரஞ்சீவி, அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.

போலா சங்கர் என்ற டைட்டிலில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னாவும், சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்சிக்காக சிரஞ்சீவியுடன் நடிகை தமன்னா, கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு பேட்டியளித்திருந்தனர்.

அப்போது படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சிரஞ்சீவி காமெடியா விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு பேசியதை இமிடேட் செய்து பேசியிருக்கிறார்.

உங்களுக்கு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டுமான்னு ஆரம்பித்து அதை அப்படி கலாய்த்து தள்ளியிருக்கிறார்.

இதை கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தமன்னா உட்பட பல விழுந்துவிழுந்து சிரித்துள்ளனர். இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி கேலி செய்து வருகிறார்கள்.