இந்த உயரத்தில் தூக்கு போட்டுக்க மாட்டா! விஜே சித்ரா தற்கொலை செய்த அறையில் கதறி அழுத தாயார்..

actress chithra dead serial
By Jon Mar 18, 2021 07:31 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த இரு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சகோதரர்களின் பாசத்தை காட்டி புகழ் பெற்ற இந்த சீரியல் முல்லை - கதிர் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹிட்டாக மாற்றியது. முல்லையாக ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்திருந்தார்.

பல ரசிகர்களை முல்லையாக ஈர்த்த விஜே சித்ரா எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்து மரணமடைந்தார். தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் அது தற்கொலை இல்லை என்று சித்ராவின் குடும்பத்தாரும் கூறி வந்தனர். அவரின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்த அறையில் விஜே சித்ரா மற்றும் ஹேமந்தின் உடமைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. சமீபத்தில், விஜே சித்ராவின் தாயாரும், தந்தையும் அந்த அறைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று சீலிங் பேனை எக்கி பிடித்து கதறி அழுதுள்ளார். இதில் என் பொண்ணு தூக்கு மாட்டிக்க முடியாது. அந்த பேன் பெட்டிற்கு பக்கத்தில் இருந்தது. நானே எக்கி பிடித்தேன். என் மகள் என்னைவிட உயரம் அதிகம். அவன் தான் கொலை செய்திருக்கனும் என்று கதறி அழுதுள்ளார் சித்ராவின் தாயார். அதற்கு ஹேமந்த்தின் தந்தையும் உடந்தை என்றும் கூறியுள்ளார்கள்.