அநியாயத்துக்கு ரசிகர்களை மிரட்டும் சியான் விக்ரமின் கெட்டப்புகள்..இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

Vikram Mirnalini Ravi Srinidhi Shetty Cobra
By Edward Aug 26, 2022 06:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் என்றால் அது விக்ரம் தான். சேது, பிதாமகன் முதல் அந்நியன், ஐ படம் வரை அவரின் நடிப்பு மக்கள் மத்தியில் சிறந்து விளங்கியது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை கண்டாலும் ரசிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் புகழ்ந்து தான் வருகிறார்கள்.

அப்படி விக்ரம் நடிப்பில் கோப்ரா வரும் ஆகஸ்ட் 31ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5.15 மணிக்கு வெளியாகியது.

பல கெட்டப்பில் மிரட்டும் சியான் விக்ரம் ரசிகர்களை தன் நடிப்பால் மிரட்டி இருக்கிறார். புது வகையான கதையை மையப்படுத்தி இருக்கிறாரே என்று புகழ்ந்தாலும் அந்நியன் படத்தில் அம்பி எப்படி மாறிமாறி பேசுவாரோ அதே போல் கடையில் நான் வெறும் மேக்ஸ் டீச்சர் சார் சொல்லியது அந்நியன் படத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அந்நியன் 2 வாக மாறிடக்கூடாது என்று நெட்டிசன்கள் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGallery