ஒரேஒரு அடி தான் நள்ளிரவில் மாறிய வாழ்க்கை! கோடிக்கணக்கில் புரளும் கிறிஸ் ராக்..

oscar willsmith chrisrock americanactor livecomedyshow chrisrockshow
By Edward Mar 30, 2022 06:39 AM GMT
Report

உலகளவில் பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கிறிஸ் ராக் என்பவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்த விஷயம் தான்.

ஆஸ்கர் விருது:-

திரையுலகில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் 94வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. சிறந்த படைப்புகள், கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்து வரும் இந்நிகழ்ச்சியில் சங்கடமான ஒரு சம்பவம் நடந்து வைரலாகியுள்ளது.

சிறந்த நடிகர் விருது:-

சிறந்த நடிகருக்கான விருதினை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த விருது வாங்குவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காமெடி நடிகரும் மேடைபேச்சு நடிகருமான கிறிஸ் ராக் வில் ஸ்மித் மனைவி ஜடாவினை கிண்டல் செய்யும் வண்ணம் பேச ஆரம்பித்தார்.

காமெடியாக எடுத்து கொண்ட பலர் சிரித்து வந்ததை ஜடா முகம் சுளித்துக்கொண்டார். ஜடாவின் தலை முடியை பற்றி அவதூறாக விமர்சித்து பேசியதை பொறுத்துக்கொள்ளாத வில் ஸ்மித் மேடையில் ஏறி எதிர்பாராத விதமாக கிறிஸ் ராக்கை அறைந்து மேடையை விட்டு விலகி கீழே சென்றார்.

அதை சகஜமாக எடுத்து நிகழ்ச்சி வந்து பேசிய கிறிஸ் ராக்கிடம், என் மனைவி பெயரை கூறாதே உன் வாயில் இருந்து வாயை மூடு என்று கெட்ட வார்த்தையோடு பேசியிருந்தார். இச்சமபவம் அரங்கில் இருந்தவர்களை அதிரவைக்க அந்த வீடியோவும் உலகளவில் பரவியது.

அதிகரித்த கிறிஸ் ராக்கின் மார்க்கெட்:-

நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடைபெற்று முடிந்த நிலையில் அறை வாங்கிய நடிகர் கிறிஸ் ராக்கிற்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதாவது தன் நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டினை வாங்க பலர் கூடியதால்,

நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் டிக்கெட் விலை 46 டாலரில் இருந்து 341 அமெரிக்க டாலராக உயர்த்தியிருக்கிறார். வருகிற வாரத்தில் வில்பர் தியேட்டரில் இந்த மேடை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.