கோவிலுக்கு சென்ற முதல் அமைச்சரை அடித்து துவைத்த நபர்...வைரலாகும் வீடியோ!

CM Chhattisgarh
By Jeeva Nov 06, 2021 02:30 AM GMT
Report

இந்தியாவில் நேற்றய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சில வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன் பூஜை என்ற சிறப்பு பூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் இந்த பூஜை கொண்டாடப்பட்டது, பூஜையின் போது அங்கு வருவபர்களுக்கு சவுக்கு அடி கொடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இந்த பூஜையில் கலந்து கொண்டு பங்கேற்று மக்களுடன் வழிப்பட்டுள்ளார். அந்தப் பூஜையில் முதலமைச்சர் சவுக்கு அடியையும் வாங்கியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.