CM விஜய் போட்ட கையெழுத்து.. குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள்..

C Joseph Vijay
By Karthick Raja May 26, 2026 03:30 AM GMT
Report

முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதற்கு பின் சினிமா துறையை சேர்ந்த பலரும் அவரை நேரில் சந்தித்தது பல விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அரசு டிக்கெட் புக்கிங் தளம் தொடங்க வேண்டும், தமிழ் சினிமாவிற்கு என்று தனியாக ஒரு ஓடிடி தளம் தொடங்க வேண்டும், உள்ளூர் கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டும், டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

CM விஜய் போட்ட கையெழுத்து.. குஷியில் தமிழ் சினிமா ரசிகர்கள்.. | Cm Vijay Annouce New Films Special Shows 7 Days

இந்த நிலையில், சினிமா துறையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், புது படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிப்பது தொடர்பாக முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இனி படம் வெளியாகி ஏழு நாட்கள் வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையினர் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்குவதே முந்தைய ஆட்சியில் போராட்டமாக இருந்ததாகவும் பலரும் கூறி இருக்கின்றனர். 

GalleryGallery