கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்ற பிரகாஷ்ராஜ்!! அரங்கை கோமியத்தால் கழுவி அசிங்கப்படுத்திய இளைஞர்கள்..

Prakash Raj Viral Video Gossip Today
By Edward Aug 09, 2023 08:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

இதற்கு பலர் எதிர்ப்பை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகா மாநில சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதியதில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு சென்று பேசியிருக்கிறார். தியேட்டர் வசனம், சமூகம் சார்ந்த உரையாடல், சினிமா போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றதை அறிந்த மாணவர்கள், கல்லூரிக்கு சம்மந்தமே இல்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என்று கேள்வி எழுப்பியும் பிரகாஷ் ராஜ் வரக்கூடாது என்று கூறியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பின் மாணவர்களை சமாதானப்படுத்தியும் மாணவர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் செய்தனர். போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு வரவழைத்து சிறப்புரையாற்றிய பின் புறப்பட்டு சென்றார்.

பிரகாஷ் ராஜ் சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியத்தை எடுத்து பிரகாஷ் ராஜ் சென்ற இடத்தினை சுத்தம் செய்து அசிங்கப்படுத்தினார். மாணவர்களில் சிலர் வேறு சிலரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதாகவும் அவர்களை அடையாளம் கண்டறியப்படவில்லை என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.