திருமணமான முதலிரவுக்கு முன் மனைவியை காதலருடன் அனுப்பி வைத்த பிரபல நடிகர்!! படமாக எடுத்தாரா பாக்கியராஜ்..

Gossip Today Tamil Actors
By Edward May 16, 2023 12:30 AM GMT
Report

1947ல் வெளியான தன அமராவதி என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் ஜேபி சந்திரபாபு. நடிகராக மட்டுமில்லாமல், பாட்டு, இசை, ஓவியம், இயக்குனர், சிற்பம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞராக திகழ்ந்து வந்தார். 1950-களில் பிரபலமான பாட்டாக கருத்தபட்ட 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே' பாடலை பாடியவர் சந்திரபாபு.

திருமணமான முதலிரவுக்கு முன் மனைவியை காதலருடன் அனுப்பி வைத்த பிரபல நடிகர்!! படமாக எடுத்தாரா பாக்கியராஜ்.. | Comdian Chandra Babu Wife The Tragic Story

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்த சந்திரபாபு, எம்ஜிஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு நிகரான நடிகராக திகழ்ந்து வந்தார். சில படங்களின் தோல்வியால் நகைச்சுவை பக்கம் செல்லாமல் இருந்த சந்திரபாபு, 47 வயதிலேயே காலமானார்.

இந்நிலையில் அவரது திருமண வாழ்க்கை குறித்த ஒரு உண்மை இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்திரபாபு, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான போதே தன்னுடைய மனைவி வேறொருவரை காதலித்த விசயம் தெரிந்து முதலிரவு சமயத்தில் அவருடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதை வைத்து தான் இயக்குனர் பாக்கியராஜ் ஏழு நாட்கள் என்ற படத்தினை இயக்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால் சந்திரபாபு தன் மனைவியுடன் தேனிலவு சென்றார் என்றும் ஆறு மாதம் அவருடன் வாழ்ந்த போது தனது மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிந்து கொண்டார்.

திருமணமான முதலிரவுக்கு முன் மனைவியை காதலருடன் அனுப்பி வைத்த பிரபல நடிகர்!! படமாக எடுத்தாரா பாக்கியராஜ்.. | Comdian Chandra Babu Wife The Tragic Story

காதலர் நினைவில் மனைவி இருப்பதை உணர்ந்து காதலருடன் சேர்த்து வைத்ததோடு அதன்பின்பும் அவருக்கு உதவியிருக்கிறார் சந்திரபாபு. அதற்கு பின் போதை பழக்கம் மற்றும் கடன் பிரச்சனையால் வீட்டை இழந்துள்ளார்.

கனவு இல்லம் போய் விட்டதே என்று நினைத்து நிலை குலைந்து போன ஜேபி சந்திரபாபு வறுமை போதையில் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.