வடிவேலு எடுத்த எண்ட்கார்ட்.. கமல் எடுக்கும் முடிவால் அதோடு கதையை முடிக்கப்போகும் காமெடி நடிகர்..

Kamal Haasan Vadivelu
By Edward Nov 01, 2022 03:54 PM GMT
Report

காமெடிக்கு பேர் போன நடிகர்களிலேயே யாரும் பார்த்திராத நடிகராக திகழ்ந்து வருபவர் வடிவேலு. ஆனால் அவருக்கு இணையாக காமெடியில் சாதனை படத்தவர் ஒருவர் இருக்கிறார்.

66 வயதான நடிகர் பிரம்மானந்தம் தான் அந்த லிஜெண்ட் நடிகர். சுமார் 1200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவராக திகழ்ந்த பிரம்மானந்தம் தற்போது உடல் முடியாமல் போவதால் நடிப்புக்கு எண்ட் கார்ட் போடப்போகிறாராம்.

தெலுங்கு சினிமாவில் லிஜெண்ட்டரி நடிகராக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வந்தார். இதுவரை கமிட்டாகி நடித்தும் நடிக்கப்போகும் படங்களில் நடித்துமுடித்து விட்டு சினிமாவுக்கு குட்பை சொல்ல போகிறாராம். அப்படி தமிழில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 2017ல் உருவான சுபாஷ் நாயுடு படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார்.

கமல் இயக்கி,தயாரித்து, நடித்த இப்படம் சில காரணங்களால் தடைப்பட்டது. முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இப்படம் மீண்டும் ஆரம்பித்தால் அதில் நடித்து சினிமாவில் இருந்து விலகவும் தயார் என்று கூறியிருக்கிறாராம் பிரம்மானந்தம்.