KPY பாலா விளம்பரத்திற்காக இதை பன்றான்?.. வெளிப்படையாக சொன்ன அமுதவாணன்

Actors KPY Bala TV Program
By Bhavya Apr 21, 2025 08:30 AM GMT
Report

அமுதவாணன்

நகைச்சுவை திறமையை கொண்டு விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று பிரபலம் ஆனவர் அமுதவாணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்ட அமுதவாணன் தனக்கென ஒரு தனி பெயரை பெற்றார். இந்நிலையில், KPY பாலா செய்து வரும் உதவிகள் விளம்பரத்திற்காக செய்வதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து அமுதவாணன்னிடம் கேள்வி கேட்கப்பட்டது.

KPY பாலா விளம்பரத்திற்காக இதை பன்றான்?.. வெளிப்படையாக சொன்ன அமுதவாணன் | Comedy Actor About Kpy Bala

இதை பன்றான்?

அதற்கு, அவர் அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " இப்போது மட்டும் அல்ல எப்போதும் பாலா என்னுடன் தான் இருக்கிறான். மற்றவர்கள் செய்ய தயங்கும் போது ஒருவன் செய்யும் உதவியை கிண்டல் செய்வது சரியாக இருக்காது.

ஒரு அரசியல்வாதி, முதல்வர் அல்லது எம்எல்ஏக்கள் விளம்பரத்திற்காக கூட தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50.000 எடுத்து கொடுப்பது நல்லது தானே. விளம்பரம் என்று சொல்லி வந்தால் மட்டும் காசாக இருக்காது. எப்படி இருந்தாலும் அது காசுதான்" என அமுதவாணன் தெரிவித்துள்ளார்.       

KPY பாலா விளம்பரத்திற்காக இதை பன்றான்?.. வெளிப்படையாக சொன்ன அமுதவாணன் | Comedy Actor About Kpy Bala