நடிப்பை விட்டு தயாரிப்பில் இறங்கிய காமெடி நடிகர்! வீட்டைவிற்று நடுத்தெருக்கு வந்த அவல நிலை

cinema actor comedy Ganja Karuppu
By Jon Mar 26, 2021 06:54 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் அதுவும் முன்னணி காமெடியன்கள் உடன் சேர்ந்து நடிப்பர்வகள் அதிகம். அதில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பருத்தி வீரன் படம் மூலம் பெற்றவர் கஞ்சா கருப்பு. பல படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்த கஞ்சா கருப்பு படங்கள் இல்லாமல் இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் பெற்ற பணத்தாலும் தான் சம்பாதித்து வைத்த பணத்தை கொண்டு வேல்முருகன் போர்வேல் என்ற படத்தினை தாயரித்தார். நடிப்பை விட்டு தயாரிப்பில் இறங்கிய கஞ்சா கருப்பு அந்த படத்தால் சுமார் 4 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்டாரம். சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் அவர் கூறியது, பல நடிகர் இயக்குநர்கள் தயாரிப்பு வேண்டாம் என்று கூறினார்கள்.

அதையெல்லாம் காதில் போடாமல் கோபி என்ற இயக்குநரை நம்பி ஏமாந்து தற்போது என் வீட்டினை விற்கும் அளவிற்கு கடனை சம்பதித்தேன். இனிமேல் சொந்தமாக படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார் கஞ்சாகருப்பு. எனவே, இவ்வாறு சொந்தக் காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட கஞ்சாகருப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி, பல அறிமுக தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் விதமாக உள்ளது.