வெறும் 11 மாதம் தான்.. விஜய் டிவி புகழ் மகளின் புதிய சாதனை, இப்படி ஒரு ரெக்கார்டா?

Cooku with Comali Pugazh Tamil Actors
By Bhavya Nov 05, 2025 05:30 AM GMT
Report

விஜய் டிவி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி ஷோக்களில் கலக்கப்போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். காரணம் சிரிக்க மறந்த மக்களையும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய சிரிக்க வைத்துள்ளது.

இந்த ஷோக்கள் மூலம் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி வந்த புகழுக்கு குக் வித் கோமாளி என்ற ஷோ ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த ஷோ கொடுத்த பிரபலம் இப்போது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் புகழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்தன்யா என்ற மகள் உள்ளார்.

ரித்தன்யா தனது சிறு வயது முதல் பல சாதனைகளை படைத்து வருகிறார். அதன்படி, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்தார்.

வெறும் 11 மாதம் தான்.. விஜய் டிவி புகழ் மகளின் புதிய சாதனை, இப்படி ஒரு ரெக்கார்டா? | Comedy Actor Pugazh Daughter New Record

புதிய சாதனை!

இந்நிலையில், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்ற சாதனையையும் ரிதன்யா படைத்திருக்கிறார்.

மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை புகழ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,