ஜோதிகா உடை குறித்து விமர்சனம், கவலைப்பட வேண்டியது அவர்கள் தான்.. பிரபலம் அதிரடி
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் ஜோதிகா நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து கொண்டார்.
6 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் ஜோதிகா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தன்னுடைய குழந்தைகளின் படிப்புக்காகவும், பெற்றோருடன் துணையாக இருக்கவும் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில், சூர்யாவும் ஜோதிகாவும் சீஷெல்ஸ் எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அது தொடர்பான, போட்டோஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், ஜோதிகாவின் உடை குறித்து விமர்சனங்கள் எழுந்தது.
பிரபலம் அதிரடி
இந்நிலையில், இது குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஃபிலிம்பேர் சினிமா நிகழ்ச்சியில் புடவையை போர்த்தி கொண்டு சென்றால், ஜோதிகா சினிமாவிலிருந்து ரிடையர் ஆகிவிட்டார் என்று நினைத்துவிடுவார்கள்.
ஜோதிகா உடையணிந்து செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி கவலைப்பட வேண்டியது சூர்யா மற்றும் 2 குழந்தைகள் தான்.. அவர்களே கவலைப்படாதபோது ரசிகர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.